ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.


ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
x
தினத்தந்தி 7 March 2021 5:11 PM GMT (Updated: 2021-03-07T22:41:20+05:30)

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, கடந்த 2 மாதங்களாக சுகாதாரப் பணியாளர்கள், முன் களப் பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயது முதல் 60 வயது வரை உள்ள சர்க்கரை நோய், சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

நேற்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அப்போது தாசில்தார் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் உள்பட பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

Next Story