துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு


துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 7 March 2021 7:02 PM GMT (Updated: 2021-03-08T00:32:04+05:30)

பழனியில் துணை ராணுவ வீரர்களின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

பழனி:

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து துணை ராணுவ வீரர்கள் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

 இதைத்தொடர்ந்து தேர்தல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் துறை சார்பில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் துணை ராணுவ வீரர்களின் கொடி அணிவகுப்பை நடத்தி வருகிறது. 

அதன்படி பழனியில் நேற்று துணை ராணுவ வீரர்களின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 

அதன்படி காலையில் கணக்கன்பட்டியில் தொடங்கிய அணிவகுப்பு பச்சளநாயக்கன்பட்டி, பழைய ஆயக்குடி, புதுஆயக்குடி வழியே சென்று வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நிறைவடைந்தது. 

மாலையில் பழனி அடிவாரம் பாதவிநாயகர் கோவில் பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு பஸ்நிலையம், மார்க்கெட் ரோடு, புதுதாராபுரம் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் வழியே சென்று தேரடி பகுதியில் நிறைவடைந்தது.


Next Story