வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மங்களமேடு:
மங்களமேட்டை அடுத்த வேப்பூரில் உள்ள பாரதிதாசன் மகளிர் கலைக்கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடந்தது. வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் மீனா தலைமை தாங்கினார். குன்னம் தேர்தல் துணை தாசில்தார் கீதா, வரகூர் வருவாய் ஆய்வாளர் புஷ்பராணி, கிராம நிர்வாக அலுவலர் சேஷாத்திரி ஆகியோர் இளம் வாக்காளர்கள் அவசியம் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியது குறித்து பேசினார்கள். மாணவிகள் ‘எனது வாக்கு எனது உரிமை’ என்ற கோஷத்துடன் பல்வேறு வடிவிலான கோலங்களை கல்லூரி வளாகத்தில் போட்டிருந்தனர். மேலும் வாக்காளர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காண தொடர்பு கொள்ள வேண்டிய 1950 என்ற எண் வடிவில் மாணவிகள் அமர்ந்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story