லால்குடி, சிறுகமணி, பெட்டவாய்த்தலை பகுதிகளில் நாளை மின்தடை


லால்குடி, சிறுகமணி, பெட்டவாய்த்தலை பகுதிகளில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 7 March 2021 9:50 PM GMT (Updated: 2021-03-08T03:20:04+05:30)

லால்குடி, சிறுகமணி, பெட்டவாய்த்தலை பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.

திருச்சி, 

லால்குடி எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதையொட்டி அன்றைய தினம் லால்குடி, ஏ.கே.நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ நகர், பட்சண்ணபுரம், சிறுதையூர், உமா நகர், பாரதி நகர், வ.உ.சி.நகர், காமராஜ் நகர், பாரதி நகர், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூர், இடையாற்று மங்கலம், மும்முடி, சோழ மங்கலம், பெரியவர் சீலி, மயில்ரங்கம், பச்சாம்பேட்டை, திருமணமேடு, மேல வாழை, கிருஷ்ணாபுரம், பொக்கடக்குடி, சேஷசமுத்திரம், பம்பரம் சுற்றி ஆகிய ஊர்களுக்கு மின் வினியோகம் இருக்காது.

அதுபோல் சிறுகமணி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி காமநாய்க்கன்பாளையம், திருவள்ளுவர் நகர், காவல்காரன்பாளையம், சிறுகமணி, பெருகமணி, திருப்பராய்துறை, முக்கொம்பு, திண்டுக்கரை ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதேபோல் பெட்டவாய்த்தலை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

அதன்படி தேவஸ்தானம், பெட்டவாய்த்தலை, காந்திபுரம், பழங்காவேரி, பழையூர்மேடு, எஸ்.புதுக்கோட்டை, குளித்தலை, நங்கவரம், அணலை, எலமனூர், கொடியாலம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 
இந்த தகவலை திருச்சி மன்னார்புரம் மின்செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

Next Story