காஞ்சீபுரம் அருகே பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் சிக்கியது

காஞ்சீபுரம் அருகே பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் சிக்கியது.
வாகன சோதனை
காஞ்சீபுரத்தை அடுத்த படுநெல்லி சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் அகிலா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ.2 லட்சதத்து 31 ஆயிரம்அப்போது அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சம்பத் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரிடம் எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த தொகையை அவரிடம் இருந்து கைப்பற்றி வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story






