விளாத்திகுளம் பகுதியில் துணை ராணுவப்படை கொடிஅணிவகுப்பு


விளாத்திகுளம் பகுதியில் துணை ராணுவப்படை கொடிஅணிவகுப்பு
x
தினத்தந்தி 8 March 2021 2:09 PM GMT (Updated: 8 March 2021 2:09 PM GMT)

விளாத்திகுளம் பகுதியில் துணை ராணுவப்படை கொடிஅணிவகுப்பு நடந்தது

விளாத்திகுளம்:
 தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி எல்கை மற்றும் விளாத்திகுளம் தொகுதிக்கு அருகாமையில் உள்ள விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட நுழைவு எல்கை பகுதிகளில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து துணை ராணுவத்தினருடன் இணைந்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே பொதுத்தேர்தலில் அச்சமின்றி அனைவரும் வாக்குப்பதிவு செய்யவும், பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் விளாத்திகுளம், எட்டயபுரம், வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் துணை ரானுவத்தினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். விளாத்திகுளம் பேரூராட்சியின் முக்கிய பகுதிகள் வழியாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ஜின்னா பீர்முகம்மது, மீரால்பானு, அனிதா, முருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story
  • chat