திருப்பத்தூரில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


திருப்பத்தூரில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 8 March 2021 6:55 PM GMT (Updated: 2021-03-09T00:25:27+05:30)

வேட்பு மனு தாக்கல் முன்னேற்பாடாக திருப்பத்தூரில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் வருகிற 12-ந்தேதி முதல் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் நேற்று மாலை திருப்பத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ள அலுவலகத்தை நேரில் ஆய்வு செய்தார். அங்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் வரும் போது அளிக்கப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் ஆலோசித்தார்.
ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ரகு, தாசில்தார் ஜெயந்தி, தேர்தல் துணை தாசில்தார் கமலக்கண்ணன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story