அரசு பள்ளி மாணவிக்கு பரிசு


அரசு பள்ளி மாணவிக்கு பரிசு
x
தினத்தந்தி 9 March 2021 12:35 AM IST (Updated: 9 March 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி மாணவிக்கு மாவட்ட சிறுசேமிப்பு துறை சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்ட ஆட்சியரகம் சிறுசேமிப்பு துறையின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு சிக்கனம் மற்றும் சிறுசேமிப்பு என்ற தலைப்பில் மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியில் புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சார்ந்த 10-ம் வகுப்பு மாணவி அஸ்லினா 2-ம் இடமும், கவிதைபோட்டியில் இதே பள்ளியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் செல்வகைலாஷ் மூன்றாமிடமும் பெற்றனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியரகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியையும் பயிற்சி அளித்த ஆசிரியர் ஜோசப் இருதயராஜையும், இவருக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியைகள் லட்சுமி, ஜான்சி, கார்த்திகா ஆகியோரையும் இப்பள்ளி தலைமையாசிரியர் நாகேந்திரன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
1 More update

Related Tags :
Next Story