108 ஆம்புலன்ஸ் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம்


108 ஆம்புலன்ஸ் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம்
x
தினத்தந்தி 8 March 2021 8:16 PM GMT (Updated: 8 March 2021 8:18 PM GMT)

வால்பாறையில் 108 ஆம்புலன்ஸ் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

வால்பாறை,

வால்பாறை பகுதியில் வால்பாறை அரசு ஆஸ்பத்திரி, முடீஸ், சோலையார் நகர், வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் அவசர சிகிச்சை மருத்துவ சேவைக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அவசர சிகிச்சை நோயாளிகள், விபத்துகளில் பாதிக்கப்பட்ட வர்களை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் பணியை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். தற்போது புதிதாக வரும் 108 ஆம்புலன்ஸ் களில் மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. 

செயல்முறை விளக்கம் 

இந்த ஆம்புலன்ஸ்களின் செயல்பாடுகள் குறித்து வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் மாணவ-மாணவிகளுக்கு ஊழியர்கள் விளக்கம் அளித்தனர். மற்ற ஆம்புலன்ஸ்களில் இல்லாத ஒரு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றும் கூறினார்கள். 

மேலும் விபத்து மற்றும் அவசர தேவைகளுக்காக 108 ஆம்புலன்ஸ் மையத்துக்கு தொடர்பு கொள்ளும்போது பெயர் மற்றும் முகவரியை தெளிவாக தெரிவிக்கும்போதுதான், கால தாமதம் இல்லாமல் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து சேர முடியும் என்றும் தெரிவித்தனர். 

விரைவில் சென்றடையும் 

பின்னர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை மாணவ-மாணவிகளுக்கு காண்பித்தும் விளக்கம் அளித்தனர். 

இது குறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறும்போது, பள்ளி மாணவர்களிடம் எந்த ஒரு திட்டம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் விரைவில் பலருக்கு சென்றடையும். அந்த வகையில் தற்போது மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது என்றனர்.


Next Story