போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு


போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 8 March 2021 8:30 PM GMT (Updated: 8 March 2021 8:33 PM GMT)

போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள 16 சோதனைச்சாவடிகளில் போலீசார் சுழற்சி முறையில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு பரிசு பொருட்கள் மற்றும் பணம் பட்டுவாடா செய்வது உள்ளிட்டவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் ஊட்டி கமர்சியல் சாலை, நகராட்சி மார்க்கெட் பகுதியில் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாகன நிறுத்துமிட பிரச்சினை, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவது, பொதுமக்களுக்கு பண பட்டுவாடா செய்யப்படுகிறதா, 

அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து போலீசார் கூறும்போது, குற்ற சம்பவங்களை தடுக்கவும், தேர்தல் நேரத்தில் கண்காணிப்பில் ஈடுபடவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றனர்.

Next Story
  • chat