புளி விற்பனை அமோகம்


புளி விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 8 March 2021 8:46 PM GMT (Updated: 8 March 2021 8:46 PM GMT)

திண்டுக்கல் நாகல்நகர் சந்தையில் புளி விற்பனை அமோகமாக நடந்தது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை புளி சந்தை செயல்பட்டு வருகிறது. 

இதில் சிறுமலை அடிவாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து புளி வியாபாரம் செய்து வருகின்றனர். 

பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைமுறையிலுள்ள இந்த சந்தை நேற்று கூடியது. 

இந்த சந்தையில் புளி விற்பனை அமோகமாக நடந்தது. திண்டுக்கல் நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் புளியை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். 

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, இன்னும் 2 மாத காலத்துக்கு திங்கட்கிழமைதோறும் இங்கு புளி விற்பனை நடைபெறும். 

அதன்படி நேற்று கூடிய சந்தையில் ஒரு கிலோ புளி ரூ.90 முதல் ரூ.150 வரையில் விற்பனையானது. 

இனிவரும் காலங்களில் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் புளி விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.

Next Story