திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மகளிர் தின விழா ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்


திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மகளிர் தின விழா ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்
x

மகளிர் தினத்தையொட்டி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்கள்.

திருச்சி,

மகளிர் தினத்தையொட்டி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்கள். 

மகளிர் தின சிறப்பு முகாம்

உலக மகளிர் தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மகளிர் தினத்தையொட்டி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் வனிதா தலைமை தாங்கினார். மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்

தொடர்ந்து ‘கேக்’ வெட்டி மகளிர் தினம் கொண்டாப்பட்டது. ஒரு நாள் நடந்த நேற்றைய சிறப்பு முகாம் மூலம் 20 பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக டீன் டாக்டர் வனிதா தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ், உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் மகாலட்சுமி, உதவி உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நர்சுகள்

இதுபோல திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் நர்சுகள் ஒருங்கிணைந்து மகளிர் தினம் கொண்டாடினர். அதையொட்டி மூத்த நர்சு ஜெயபாரதி தலைமையில் ‘கேக்’ வெட்டி கொண்டாடப்பட்டது. ஒருவருக்கொருவர் ரோஜாப் பூ கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

மேலும் திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் நேற்று மகளிர் தினத்தை கொண்டாடினர். இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், டாக்டர்கள் இணைந்து மகளிர் தினத்தை ‘கேக்’ வெட்டி கொண்டாடுகிறார்கள்.

Next Story
  • chat