ஈரோட்டில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு


ஈரோட்டில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
x

ஈரோட்டில் துணை ராணுவ படையினா் கொடி அணிவகுப்பு நடத்தினாா்கள்.

ஈரோடு
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளது.  மேலும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்கு அளிக்கவும், பாதுகாப்பை கவனிக்கவும் துணை ராணுவத்தினர் ஈரோட்டுக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை துணை ராணுவத்தினர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தினர். ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் இருந்து புறப்பட்ட கொடி அணிவகுப்பு மணிக்கூண்டு, நேதாஜி ரோடு, சத்தி ரோடு, சுவஸ்திக் கார்னர் வழியாக சென்று வீரப்பன்சத்திரம் பகுதியில் நிறைவடைந்தது.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன் கார்த்திக்குமார், கனகேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு, சேகர், உதயகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story