இலவச மடிக்கணினி கேட்டு அரசு பள்ளியில் மாணவிகள் முற்றுகை போராட்டம்


இலவச மடிக்கணினி கேட்டு அரசு பள்ளியில் மாணவிகள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 9 March 2021 6:12 AM GMT (Updated: 9 March 2021 6:12 AM GMT)

தமிழக அரசின் சார்பில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

பூந்தமல்லி,

தமிழக அரசின் சார்பில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. சென்னை போரூரை அடுத்த சின்ன போரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2017 மற்றும் 2018-ம் ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்த மாணவிகளுக்கு இதுவரை அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட மாணவிகள், அரசு பள்ளிக்கூடம் முன்பு தங்களது பெற்றோருடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த போரூர் போலீசார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சட்டமன்ற தேர்தல் நேரத்தில் மடிக்கணினி எதுவும் வழங்ககூடாது என்பதால், தேர்தல் முடிந்த பிறகு அனைவருக்கும் மடிக்கணினி வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

 


Next Story