திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வாக்களிப்பது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி


திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வாக்களிப்பது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 9 March 2021 11:35 AM GMT (Updated: 2021-03-09T17:05:50+05:30)

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வாக்களிப்பது குறித்து மாணவிகளுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் மற்றும் சாலை பாதுகாப்பு படை இணைந்து மாணவிகளுக்கு மாதிரி வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிப்பது பற்றி செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி முன்னிலையில், திருச்செந்தூர் முதுநிலை வரைவாளர் வெள்ளைபாண்டி, வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் வேல், கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம் ஆகியோர் மாணவிகளுக்கு மாதிரி வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிப்பது பற்றி செய்முறை விளக்கம் அளித்தனர். மேலும் பதிவு செய்யப்பட்ட மாதிரி வாக்குகளை சரிபார்க்கப்பட்டது. ஏற்பாடுகளை சாலை பாதுகாப்பு படை பொறுப்பாளர் ஜான்சிராணி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story