தூத்துக்குடியில் பெண் போலீசாருக்கான விளையாட்டு போட்டி


தூத்துக்குடியில் பெண் போலீசாருக்கான விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 9 March 2021 2:33 PM GMT (Updated: 2021-03-09T20:03:21+05:30)

தூத்துக்குடியில் பெண் போலீசாருக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடி:
சர்வேதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை மற்றும் ஜே.சி.ஐ. பியர்ல் சிட்டி அமைப்பு இணைந்து நடத்திய பெண் போலீசாருக்கான மகளிர் தின விளையாட்டு போட்டிகள் நடந்தன. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அரசு வக்கீல் சுபாஷினி, ஜே.சி.ஐ. பியர்ல் சிட்டி அமைப்பின் தலைவர் வில்சன் அமிர்தராஜ், செயலாளர் சுதா சாலமோன், திட்ட ஒருங்கிணைப்பாளர் அஜிதா பிரபு, சங்கரி பிரசாத் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தாமரை கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story