மூங்கில்துறைப்பட்டு அருகே 2 தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்

மூங்கில்துறைப்பட்டு அருகே  2 தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்
x
தினத்தந்தி 9 March 2021 5:02 PM GMT (Updated: 2021-03-09T22:32:28+05:30)

மூங்கில்துறைப்பட்டு அருகே 2 தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியம்மாள்(வயது 55). இவர் 10-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு ஆடு நேற்று 3 குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு குட்டிக்கு 2 தலை, 4 கால்கள் இருப்பதைப்பார்த்து ஆரோக்கியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து 2 தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். 

இதுகுறித்து கால்நடை மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது மரபணு மாறுபாடு காரணமாக இதுபோன்று 2 தலை, 5 கால்கள் உடன் ஆடு, மாடுகள் குட்டி போடுகின்றன. இது மிகவும் அபூர்வம் என்றார்.

Next Story