போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு-சான்றிதழ்


போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு-சான்றிதழ்
x
தினத்தந்தி 9 March 2021 5:52 PM GMT (Updated: 9 March 2021 5:52 PM GMT)

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு-சான்றிதழ்

பனைக்குளம்
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நுண்ணுயிரியல் துறை தலைவர் காசிநாததுரை வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் அமானுல்லா ஹமீது மகளிர் தின சிறப்பு பற்றி பேசினார். இதைதொடர்ந்து செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். முடிவில் கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் மகிமா நன்றி கூறினார். நிகழ்ச்சியை தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ரஞ்சித்குமார் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது மற்றும் சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர்.
திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தாசில்தார் செந்தில்வேல் முருகன், தலைமையிடத்து துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னாண்டோ ஆகியோர் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு மகளிர் தின வாழ்த்து கூறி இனிப்பு வழங்கினர். திருவாடானை யூனியன் அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா தலைமையில் பெண் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ஜெயமுருகன், பழனிநாதன், அருள் முடியப்ப தாஸ் மற்றும் அலுவலர்கள் இனிப்பு வழங்கினர்.
​கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ரஜபுதீன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஆலியா, கல்லூரி முதல்வர் டோலாரோஸ் மேரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாணவிகள் திவ்யா, லலிதா ஆகியோர் வரவேற்றனர். மாணவிகளுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள் மதீனா, விமலி, மலர் ஆகியோர் செய்திருந்தனர். மாணவிகள் ஜமினா பேகம், பானுப்ரியா ஆகியோர் நன்றி கூறினர்.

Next Story