கணினி குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு


கணினி குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 9 March 2021 6:17 PM GMT (Updated: 2021-03-09T23:47:02+05:30)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கணினி குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கணினி குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

சட்டமன்ற பொதுத்தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களுக்கு கணினி குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

இதற்காக ஆற்காடு ஒழுங்கு முறை விற்பனை கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி, கணினி குலுக்கல் அடிப்படையில் ஒதுக்கும் பணி நடந்தது.

அப்போது கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூறியதாவது:-

கூடுதல் இருப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1447 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடி மையத்திலும் பயன்படுத்தப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும்கருவி, கட்டுப்பாட்டு கருவிகள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேவைப்படுகின்ற எண்ணிக்கையை விட 20 சதவீத வாக்குப்பதிவு எந்திரங்களும், 30 சதவீத வாக்குப்பதிவு தணிக்கை எந்திரங்களும் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக 

அந்த வகையில் இன்று (நேற்று) முதல் கணினி முறை குலுக்கலின்படி, அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்கு 381 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 381 கட்டுப்பாட்டு கருவிகள், 413 யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு 465 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 465 கட்டுப்பாட்டு கருவிகள், 504 யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு 450 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 450 கட்டுப்பாட்டு கருவிகள், 488 யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு 442 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 442 கட்டுப்பாட்டு கருவிகள், 479 யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
""

Next Story