காலதாமதமாக குடிநீர் வினியோகம்: மாநகராட்சி வார்டு அலுவலகம் முற்றுகை


காலதாமதமாக குடிநீர் வினியோகம்: மாநகராட்சி வார்டு அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 10 March 2021 11:52 AM IST (Updated: 10 March 2021 11:53 AM IST)
t-max-icont-min-icon

துடியலூரில் காலதாமதமாக குடிநீர் வினியோகம் செய்வதை கண்டித்து மாநகராட்சி வார்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

துடியலூர்,

கோவை மாநகராட்சி 3-வது வார்டு துடியலூர் வயலட் கார்டன், யமுனா வீதி, கங்கா வீதி, சுப்பிரமணியம்பாளையம் உள்ளிட்ட பகுதிக ளுக்கு 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் மாநகராட்சியில் புகார் கொடுத்தனர்.

இதை கண்டித்து தி.மு.க. வார்டு செயலாளர் சந்திரசேகர் தலைமை யில் பொதுமக்கள் திரண்டு துடியலூரில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

இதை அறிந்த மாநகராட்சி உதவி பொறியாளர் மற்றும் துடியலூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள், முறையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர். 

Next Story