சேலத்தில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சேலத்தில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 March 2021 1:09 PM IST (Updated: 11 March 2021 1:10 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நேற்று அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம்,

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு காவல்துறை கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதனால் அவரை கண்டித்து சேலத்தில் நேற்று அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். பின்னர் , டி.ஜி.பி.யை கைது செய்ய வேண்டும், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story