கோவையில் ஒரே நாளில் ரூ.4¼ லட்சம் பறிமுதல்


கோவையில் ஒரே நாளில் ரூ.4¼ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 13 March 2021 7:09 AM IST (Updated: 13 March 2021 7:14 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஒரே நாளில் ரூ.4¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை,

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 இதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படையினர் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று சூலூர் பகுதியில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 50- ஐ செய்தனர். கோவை மாவட்டத்தில் நேற்று மட்டும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4,25,850-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

 கோவையில் இதுவரை மொத்தம் ரூ.55,86,870 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட உள்ள பணத்தில் உரிய ஆவணங்களை காம காண்பித்ததால் ரூ.2,24,500 மட்டும் திருப்பி கொடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story