சேலம் வந்த 7 பேருக்கு கொரோனா
நாமக்கல், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 7 பேருக்கு கொரோனா குஜராத்தில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 18 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், வாழப்பாடி பகுதியில் ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கபட்டனர்.
மேலும் நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 4 பேர், தர்மபுரியில் இருந்து சேலம் வந்த 2 பேர், ஈரோட்டில் இருந்து சேலம் வந்த ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளி மாநிலத்தில் இருந்து சேலம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, குஜராத் மாநிலத்தில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது.
இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 879 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் குணமடைந்துவிட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 92 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story