தேர்தல் பணியில் இருந்து விடுப்பு அளிக்கக்கோரி தத்தெடுத்த குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அங்கன்வாடி ஊழியர்


தேர்தல் பணியில் இருந்து விடுப்பு அளிக்கக்கோரி தத்தெடுத்த குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அங்கன்வாடி ஊழியர்
x
தினத்தந்தி 17 March 2021 11:35 AM IST (Updated: 17 March 2021 11:35 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பணியில் இருந்து விடுப்பு அளிக்கக்கோரி தத்தெடுத்த குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

காஞ்சீபுரம், 

ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட மொளசூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பத்மாவதி-சந்தோஷ்குமார் தம்பதி. பத்மாவதி அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் மத்திய அரசின் தத்து பிள்ளைகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்க இவர்கள் பதிவு செய்திருந்தனர்.

இதனிடையே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அங்கன்வாடி ஊழியர் பத்மாவதி பணி செய்ய முன்னதாக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராவிதமாக கடந்த 10-ந் தேதியன்று மராட்டியத்தில் இருந்து ஒரு அழகிய ஆண் குழந்தை மத்திய அரசின் நடைமுறை விதிகளோடு பத்மாவதிக்கு தத்து கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், பதிவு செய்த குறுகிய காலத்திலேயே தனக்கு குழந்தை கிடைத்ததால், தன்னால் தேர்தல் பணி மேற்கொள்ள இயலாது என்ற கோரிக்கையுடன் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தேர்தல் அலுவலரை பத்மாவதி சந்திக்க முயன்றார். ஆனால் அங்கு தேர்தல் அலுவலரை அவர் சந்திக்க முடியாததால், மாவட்ட கலெக்டர் வளாகத்திலுள்ள தேர்தல் பிரிவில் விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார். விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவாிடம் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
1 More update

Next Story