இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 Jan 2026 11:53 AM IST
பொங்கல் பண்டிகை: வீட்டில் பொங்கல் வைக்க நல்ல நேரம்
பொங்கல் தினத்தன்று புதிய பானையில் புது அரிசியிட்டு பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
- 14 Jan 2026 11:51 AM IST
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட 'பராசக்தி' படக்குழு
டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்பட பராசக்தி படக்குழுவினரும் பங்கேற்றனர்.
- 14 Jan 2026 11:21 AM IST
பொங்கல் ஒரு உலகளாவிய விழாவாக மாறிவிட்டது: டெல்லியில் விழாவில் பிரதமர் மோடி பேச்சு
டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
- 14 Jan 2026 11:07 AM IST
பாரம்பரிய கட்டிடங்களை காண சென்னை உலா சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம்
அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் வீதம் பஸ் நிலையங்களுக்கு வரும். அதில் ரூ.50 கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று பயணிக்கலாம்.
- 14 Jan 2026 11:06 AM IST
தாய்லாந்து: ரெயில் மீது கிரேன் சரிந்ததில் 22 பேர் பலி
ரெயில் செல்லும் பாதையில் அதிவிரைவு ரெயில் திட்டம் சார்ந்த பணிகள் நடந்து வந்துள்ளன.
- 14 Jan 2026 11:04 AM IST
மும்பை மாநகராட்சி தேர்தல்: இந்திய பங்குச் சந்தைக்கு நாளை விடுமுறை
மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை எவ்வித பங்கு வர்த்தகமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14 Jan 2026 11:03 AM IST
நாட்டு மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- 14 Jan 2026 11:01 AM IST
சபரிமலையில் நெய் விற்பனை முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கேரள ஐகோர்ட்டு உத்தரவு
சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் நெய்யில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் வி.ராஜா விஜயராகவன், கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
- 14 Jan 2026 10:59 AM IST
போகி பண்டிகை: புதுச்சேரியில் இன்று விடுமுறை
இன்று விடுமுறையை ஈடுசெய்ய வரும் 31-ல் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14 Jan 2026 10:56 AM IST
ஈரானில் தொடரும் போராட்டம்: பலி எண்ணிக்கை 2,571 ஆக உயர்வு
போராட்டங்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.



















