மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்ஜோதி வாக்கு சேகரிப்பு


மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்ஜோதி வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 17 March 2021 12:01 PM IST (Updated: 17 March 2021 12:01 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுபிரசுரம் வினியோகித்து மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்ஜோதி வாக்கு சேகரிப்பு.

திருச்சி, 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி போட்டியிடுகிறார். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கிய அவருக்கு சமயபுரம் நால்ரோடு, மண்ணச்சநல்லூர் கடைவீதி, திருப்பைஞ்சீலி ஆகிய இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்து விட்டு அவர் பிரசாரத்தை தொடங்கினார். 

மண்ணச்சநல்லூர் தொகுதி முழுவதும் கிராமங்களில் பரஞ்ஜோதி முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். வீடு வீடாக சென்று அ.தி.மு.க. அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து தனக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில்வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். 

இந்த வாக்கு சேகரிப்பின்போது அவர் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அவரது பொற்கால ஆட்சி தொடர மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை, வருடத்திற்கு ஆறு கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். 

அந்த வாக்குறுதிகள் நிறைவேற வேண்டுமானால் மீண்டும் அ.தி.மு.க. அரசு அமைய வேண்டும். அதற்கு இந்த தொகுதியில் போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார். 

Next Story