வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு-கலெக்டர் ஆய்வு


வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு-கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 17 March 2021 5:21 PM IST (Updated: 17 March 2021 5:21 PM IST)
t-max-icont-min-icon

போளூரில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆய்வு செய்தார்.

போளூர்

போளூர் தொகுதியில் தேர்தலை யொட்டி பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியிலும் நடந்தது. 

தேர்தல் குறித்த விரிவான பயிற்சி, படிவங்கள் பூர்த்தி செய்யும் முறை, வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல் விளக்கம் போன்றவை நடந்தது.

கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி ஆகியோர் திடீரென வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

கலெக்டர், பயிற்சியில் கலந்து கொண்டவர்களிடம் கேள்விகள் கேட்டார். அப்போது அவர், தேர்தலில் பொறுப்பாக கடமையாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். 

அதில் தாசில்தார் சாப்ஜான், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயவேல், தேர்தல் துணைத் தாசில்தார்கள் மஞ்சுளா, காஜா மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

Next Story