மதுரையில் புதிதாக 19 பேருக்கு கொரோனா


மதுரையில் புதிதாக 19 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 March 2021 10:46 PM IST (Updated: 17 March 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் புதிதாக 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை,

மதுரையில் நேற்று புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 15 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 408 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மதுரையில் நேற்று 9 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 8 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். 

இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 853 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 93 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

மதுரையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே நோய் தடுப்பு விதிமுறைகளை அனைவரும் தவறாமல் கடைபிடித்து கொரோனா பரவலை தடுத்திட வேண்டும் என்று சுகாதார துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story