ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீசாருக்கான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீசாருக்கான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
x
தினத்தந்தி 17 March 2021 6:52 PM GMT (Updated: 17 March 2021 6:52 PM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீசாருக்கான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 24 போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் போலீசார் அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மொத்தம் 2 ஆயிரம் முகக் கவசம் வழங்கப்பட்டது. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 8 ஆயிரம் வைட்டமின் மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டது.

மாவட்டத்தில் பணியாற்றும் 809 போலீசாரில் 765 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நோய் தடுப்பு முயற்சியை சிரத்தையாக மேற்கொண்டு சமுதாயத்துக்கு முன்மாதிரியாக திகழும் படி அறிவுரை வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்துப் போலீஸ் நிலையங்கள், அலுவலகங்கள் தூய்மைப் படுத்தப்பட்டது. அனைத்து இடங்களிலும் நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது.
மேற்கண்ட தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் தெரிவித்தார்.

Next Story