லால்குடி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் வேட்பு மனு தாக்கல்
லால்குடி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
லால்குடி,
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் லால்குடி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. வேட்பாளராக தர்மராஜ் போட்டியிடுகிறார். அவர் நேற்று காலை லால்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்தியநாதனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்பாளருடன் திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார், பா.ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.முன்னதாக லால்குடி ரவுண்டானா பகுதியில் இருந்து ரெயில்வே மேம்பாலம் வழியாக பரமசிவபுரம் பகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு த.மா.கா. வேட்பாளர் தர்மராஜை பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க. கூட்டணி கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
அப்போது, வேட்பாளருடன் த.மா.கா. மாவட்ட தலைவர் கே.வி.ஜி.ரவிந்திரன், பா.ஜனதா கட்சி மாவட்ட பொது செயலாளர் சுகுமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சூப்பர் நடேசன்(லால்குடி தெற்கு), வக்கீல்
அசோகன் (லால்குடி வடக்கு), சிவகுமார் (புள்ளம்பாடி தெற்கு), ராஜாராம் (புள்ளம்பாடி வடக்கு), நகர செயலாளர்கள் லால்குடி சந்திரசேகரன், பூவாளூர் ஜெயசீலன், புள்ளம்பாடி ஜேக்கப் அருள்ராஜ், கல்லக்குடி பிச்சை பிள்ளை, லால்குடி முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எம்.பாலன், திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட பாசறை செயலாளர் வி.டி.எம்.அருண் நேரு, மற்றும் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா, த.மா.கா. கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story