அரவக்குறிச்சி தொகுதியில் 20 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலை வாக்குறுதி
அரவக்குறிச்சி தொகு தியில் 20 ஆயிரம் இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கு வோம் என பா.ஜ.க வேட் பாளர் அண்ணாமலை வாக்குறுதி அளித்தார்.
அரவக்குறிச்சி,
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலை அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், இதுவரை எத்தனையோ முறை ஓட்டுப்போட்டுள்ளீர்கள். இந்த முறை நீங்கள் போடும் ஓட்டு உங்கள் சந்ததியினருக்கானது. அரவக்குறிச்சி தொகுதி இதுவரை முன்னேறவில்லை. அ.தி.மு.க. , பா.ஜ.க. மற்றும் கூட்டணியின் நோக்கம் அரவக்குறிச்சி தொகுதியில் முதலில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பதுதான்.
மத்திய அரசிடம் நிதிபெற்று அரவக்குறிச்சியில் வேலைவாய்ப்பை உருவாக்கி 20 ஆயிரம் இளைஞர்களை வெளியில் வேலைக்குச் செல்லாமல் தொகுதியில் தக்கவைத்துக் கொள்வோம். எனக்கு இந்த ஒருமுறை வாய்ப்பளித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார். அப்போது அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கட்சியினர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story