போடி சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் தொடங்கினார்
போடி சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் தொடங்கினார் அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக தமிழகம் திகழ்வதாக பெருமிதம்.
தேனி,
போடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டி யிடும் துணை முதல் -அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரத்தை தொடங்கினார். அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக தமிழகம் திகழ்வதாக பெருமிதத்துடன் அவர் தெரிவித்தார்.
நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப் பாளருமான ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். ஏற்கனவே 2 முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 3-வது முறையாக களம் காண்கிறார். இந்த சட்டமன்ற தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை தேனியை அடுத்துள்ள அரண்மனைப்புதூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கினார்.
அரண்மனைப்புதூர்- கொடுவிலார்பட்டி சாலை யில் முல்லைநகர் சாலை சந்திப்பு பகுதியில் திரண்டு நின்ற பொதுமக்கள் அவருக்கு உற்சாக வர வேற்பு அளித்தனர். பிரசார வேனில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் இறங்கி மக்கள் மத்தியில் நடந்து வந்து வாக்கு சேகரித்தார். பின்னர் அங்குள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் வாக்கு சேகரித்து பேசியதாவது:-
என்னை இந்த சட்டமன்ற தொகுதியில் 2 முறை மக்கள் வெற்றி பெறச் செய்தார்கள். அப்போது நான் நல்ல சட்டமன்ற உறுப்பினராக செயல்படுவேன் என்று வாக்குறுதி அளித்து இருந்தேன். 2011-ம் ஆண்டு மற்றும் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் போது நான் அளித்த வாக்குறுதிகளை 100-க்கு 100 சதவீதம் நான் நிறைவேற்றி கொடுத்துள்ளேன்.
முல்லைப்பெரியாறு ஆற் றில் இருந்து 18-ம் கால்வாய் நீட்டிப்பு வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அது நிறை வேற்றிக் கொடுக்கப்பட்டு உள்ளது. போடி தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதுவும் நிறைவேற்றிக் கொடுக் கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தேனி மாவட் டத்தில் அரசு சட்டக்கல்லூரி, அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலி டெக்னிக் கல்லூரி, ஐ.டி.ஐ. என பல்வேறு கல்வி நிறுவனங்கள் உருவாக்கப் பட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மாணவச் செல்வங்களுக்கு குறைந்த கட்டணத்தில் படிக்கும் நல்ல வசதியை நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு தமிழகத் தின் முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்று, தமிழக மக்களுக்கு எண்ணற்ற தொலைநோக்கு திட்டங் களை நிறைவேற்றிக் கொடுத் தார். ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் ஆகிய மூன்றையும் ஒரு நல்ல ஆட்சியாளர்கள் நிறைவேற்றித் தரவேண்டும். அதை தான் ஜெயலலிதா தனது பொற்கால ஆட்சியில் மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசியை தந்து ஏழை, எளிய மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தார். இலவச வேட்டி, சேலை, குடியிருக்க வீடு போன்ற திட்டங்களை வழங்கினார்.
12 லட்சம் ஏழை, எளிய மக்கள் வீடில்லாமல் வசிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு 2023-ம் ஆண்டுக் குள் வீடற்ற அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, இன்று வரை 6 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட்டு ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. தேனி மாவட்டத்தில் 2,300 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலைமை உள்ளது. 2023-ம் ஆண்டுக்குள் அனைவருக் கும் தரமான காங்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
போடி தொகுதியில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. சாலை வசதி முழுமையாக போடப்பட்டு உள்ளது. மக்களின் பிரச் சினைகளை, அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்த நல்ல அரசாக கடந்த 10 ஆண்டுகால ஆட்சி விளங்குகிறது.
பெண்கள் நாட்டின் கண்கள் என்று பெண்கள் பாதுகாப்புக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தலா 4 கிராம் தங்கம் என 2016-ம் ஆண்டு வரை 5 ஆண்டு காலம் முழுமையாக வழங்கப்பட்டது. பின்னர், 2016-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. அரசு அமைந்த பின், தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி தாலிக்கு 4 கிராம் தங்கம் என்பதை 8 கிராம் என்று உயர்த்தி வழங்கி வருகிறோம். பெண்களின் வேலைச்சுமையை குறைக்க அனைத்து குடும்பங் களுக்கும் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டது.
இன்றைக்கு நடந்து கொண்டு இருக்கும் அரசும், அதை தலைமை தாங்கி நடத்தி வரும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமி, ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களை யும் தொடர்ந்து செயல்படுத்த வருகிறார். எந்த திட்டங் களையும் குறைக்கவில்லை. கூடுதலாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டு உள்ளது. அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.
தமிழகத்தில் மக்களின் தேவைகளை அறிந்து நிறை வேற்றும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சியும் இல்லை, காங்கிரஸ் ஆட்சியும் இல்லை என்கிற நிலைதான் இருக்கிறது. ஒருபக்கம் மக்களை பாதுகாக்கும் அரசாகவும், மற்றொருபக்கம் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் துன் பங்கள், துயரங்களில் உடன டியாக நிவாரணம் வழங்கும் ஆட்சியாக தான் அ.தி.மு.க. ஆட்சி விளங்கி வருகிறது.
உங்களில் ஒருவனாக இருந்து உங்களுக்காக 10 ஆண்டுகாலம் பணியாற்றிக் கொண்டு இருக்கும் என்னை நீங்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து முல்லைநகர், கோட்டைப்பட்டி, வீரு சின்னம்மாள்புரம், அய்ய னார்புரம், பாண்டிய ராஜபுரம், மரியாயிபட்டி, பள்ளபட்டி, சத்தியநாதபுரம் ஆகிய ஊர்களிலும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரசாரத் தில் தேனி எம்.பி. ப.ரவீந்திர நாத், தேனி ஒன்றிய செயலா ளர் ஆர்.டி.கணேசன், பா.ஜனதா மாவட்ட தலைவர் பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story