போலி ஜி.எஸ்.டி. ரசீது மோசடி; ஒருவர் கைது; சிறையில் அடைப்பு


போலி ஜி.எஸ்.டி. ரசீது மோசடி; ஒருவர் கைது; சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 20 March 2021 11:42 AM GMT (Updated: 2021-03-20T17:12:19+05:30)

போலி ஜி.எஸ்.டி. ரசீது மோசடிகளுக்கு எதிரான தொடர் நடவடிக்கை கைது செய்துள்ளனர்.

போலி மற்றும் பொய்யான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) ரசீது மோசடிகளுக்கு எதிரான தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அப்பாவி நபர்களின் கே.ஒய்.சி. ஆவணங்களை பயன்படுத்தி போலி நிறுவனங்களுக்கான ஜி.எஸ்.டி. பதிவுகளை வாங்கி, பின்னர் அவற்றை போலி ரசீதுகள் வழங்கும் நபர்களுக்கு விற்று வந்த நபர் ஒருவரை கைது செய்யுமாறு சென்னை தெற்கு ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் ஆணையர் கே.எம்.ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். அந்த வகையில் 5 நிறுவனங்களை வாங்கி ரூ.44.29 கோடி அளவுக்கு போலி கடன் மோசடியில், கைது செய்யப்பட்டுள்ள நபர் ஈடுபட்டது 
தெரியவந்துள்ளது. ஜனவரி மாதம் முதல் அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வந்த உதவி ஆணையர் அப்துல் ரகீம், கண்காணிப்பாளர் ஜெயபிரகாஷ் மற்றும் ஆய்வாளர் ஞானி ஆகியோர் தலைமையிலான குழு, தற்போது அவரை கைது செய்துள்ளனர்.

அறிமுகமில்லாத நபர்கள், நிறுவனங்களிடம் தங்களது கே.ஒய்.சி. ஆவணங்களை பகிரவேண்டாம் என்று பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கைது செய்யப்பட்டுள்ள நபர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட தகவல் சென்னை தெற்கு ஆணையகத்தின் இணை ஆணையர் டி.நளினா சோபியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story