தக்கலையில் சப்-கலெக்டர் அலுவலகம் முன் இந்து மகா சபா ‘திடீர்’ போராட்டம்


தக்கலையில் சப்-கலெக்டர் அலுவலகம் முன் இந்து மகா சபா ‘திடீர்’ போராட்டம்
x

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் தக்கலையில் சப்-கலெக்டர் அலுவலகம் முன் இந்து மகா சபாவினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்மநாபபுரம், 
வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் தக்கலையில் சப்-கலெக்டர் அலுவலகம் முன் இந்து மகா சபாவினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேட்புமனு தாக்கல்
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட 22 வேட்பு மனுக்கள் தாக்கல்  செய்யப்பட்டிருந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் நேற்று நடந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடிக்காத 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதில் அகில பாரத இந்து மகா சபா வேட்பாளர்  துரைராஜின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 
வேட்பு மனுவில் வேட்பாளர் மனைவியின் நிரந்தர வருமான கணக்கு எண் பதிவு செய்யாததால் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டது. 
போராட்டம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் இந்து மகா சபா வேட்பாளர் அதிர்ச்சி அடைந்தார். அத்துடன் வேட்புமனுவை சரியாகவே தாக்கல் செய்தோம் என கூறி சப்-கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் கட்சி தொண்டர்கள் சப்-கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர்.
அவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்திக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசந்திரன், இன்ஸ்பெக்டர் சுதேசன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். 
நீண்ட நேர பேர்ச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த பிரச்சினை தொடர்பாக ஐகோர்ட்டை நாடுவதாக கூறிவிட்டு இந்து  சபாவினர்  கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story