ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 March 2021 6:15 PM GMT (Updated: 20 March 2021 6:15 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதிகரிக்கும் கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பரவிய கொரோனா படிப்படியாக அதிகரித்து மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியது.பின்னர் கொரோனா தாக்கம் குறைந்தது. கடந்த சில மாதங்களாக ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் கொரோனா தொற்று இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

14 பேருக்கு தொற்று

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை மஜித் ரோடு பகுதியில் தனியார் கிளீனிக் நடத்தி வரும் டாக்டர் ஒருவருக்கும், .அதேபோல் வாணியங்குடி பகுதியில் வசித்து வரும் டாக்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் உள்பட 14 பேர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் வசித்துவரும் பகுதியில் சுகாதார துறையினர் முகாமிட்டதுடன் அக்கம்பக்கத்தில் வசித்து வருபவர்களிடம் சளி, மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.

Next Story