கிராம நிர்வாக உதவியாளர் மீது தாக்குதல்


கிராம நிர்வாக உதவியாளர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 20 March 2021 8:05 PM GMT (Updated: 2021-03-21T01:35:12+05:30)

கிராம நிர்வாக உதவியாளர் தாக்கப்பட்டார்.

திருமயம், மார்ச்.21-
திருமயம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ் (வயது 39). தேர்தல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இவர் நேற்று காலை 11 மணியளவில் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்சி போஸ்டர்களை அப்புறப்படுத்தினார். அப்போது திருமயம் தகர கொட்டகை அருகே கட்சி போஸ்டரை அப்புறப்படுத்திய போது, ஒரு சாதி கட்சி அமைப்பை சேர்ந்த 5 பேர் தகராறில் ஈடுபட்டு பணியை செய்யவிடாமல் தடுத்தனர். மேலும் அவரை தாக்கி வண்டி சாவியை அபகரித்தனர். இதுகுறித்து ரமேஷ் திருமயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story