போலீஸ் நிலையத்தில் 64 துப்பாக்கிகள் ஒப்படைப்பு


போலீஸ் நிலையத்தில் 64 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 20 March 2021 9:48 PM GMT (Updated: 2021-03-21T03:18:28+05:30)

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு போலீஸ் நிலையத்தில் 64 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
சட்டமன்ற தேர்தலைெயாட்டி போலீஸ் நிலையத்தில் 64 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்டு கூறினார். 
துப்பாக்கி 
ஸ்ரீவில்லிபுத்தூர் துைண போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:- 
 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனுமதி பெற்று வைத்திருக்கும் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. 
அந்தவகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் தாலுகா போலீஸ் நிலையம், மல்லி, மம்சாபுரம், கிருஷ்ணன்கோவில்,  வத்திராயிருப்பு, கூமாபட்டி, நத்தம்பட்டி, வன்னியம்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலைய பகுதியில் அனுமதி பெற்று துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என  உத்தரவிடப்பட்டு இருந்தது.
பாதுகாப்பு பணி 
 அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 64 துப்பாக்கிகள் இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளது.   மொத்தம் 74 துப்பாக்கிகள் அனுமதி பெற்று பயன்பாட்டில் இருந்து வருகிறது.
 அதில் 10 துப்பாக்கிகள் வங்கிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தடுப்படுகிறது. மீதமுள்ள 64 துப்பாக்கிகள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story