திருவள்ளூர் மாவட்டத்தில் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி; நண்பர் படுகாயம்


திருவள்ளூர் மாவட்டத்தில் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி; நண்பர் படுகாயம்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் லாரி மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஆரணியை சேர்ந்தவர் சுருதிபிரியன் (வயது 19). அதேபோல் ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் சீனிவாசன் (19). நண்பர்களான இவர்கள் இருவரும் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தனர்.

நேற்று மாலை வழக்கம்போல் கல்லூரி முடிந்து இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்றனர். நொளம்பூர் மேம்பாலம் வழியாக சென்றபோது அரியலூரில் இருந்து சிமெண்டு மூட்டை ஏற்றி வந்த லாரி இவர்களது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த சுருதிபிரியன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னால் அமர்ந்து வந்த சீனிவாசன் படுகாயம் அடைந்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான புருஷோத்தமன் (26) என்பவரை கைது செய்தனர்.

Next Story