காஞ்சீபுரம் மாவட்டத்தில் 76 வேட்பு மனுக்கள் ஏற்பு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 76 வேட்பு மனுக்கள் ஏற்பு
x
தினத்தந்தி 21 March 2021 11:34 AM GMT (Updated: 21 March 2021 11:34 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 76 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

வேட்பு மனு தாக்கல்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதியில் 36 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் 14 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. 22 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 25 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 15 மனுக்கள் ஏற்கப்பட்டது.ஆலந்தூர் தொகுதியில் 48 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 27 மனுக்கள் ஏற்கப்பட்டது. 21 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.உத்திரமேரூர் தொகுதியில் 33 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 20 மனுக்கள் ஏற்கப்பட்டது.காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 76 மனுக்கள் ஏற்கப்பட்டது.

செங்கல்பட்டு
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வேட்பு மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டு 14 மனுக்கள் ஏற்கப்பட்டது. 16 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 12 மனுக்கள் ஏற்கப்பட்டது.

திருப்போரூர்
செய்யூர் (தனி) தொகுதியில் 22 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 12 மனுக்கள் ஏற்கப்பட்டது.திருப்போரூர் தொகுதியில் மொத்தம் 22 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 12 மனுக்கள் ஏற்கப்பட்டு 12 மனுக்கள் நிராகரிக்கப்படடன.தாம்பரம் தொகுதியில் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் 21 மனுக்கள் ஏற்கப்பட்டது. 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.பல்லாவரம் தொகுதியில் 35 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் 21 மனுக்கள் ஏற்கப்பட்டு 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.சோழிங்கநல்லுார் தொகுதியில் 41 மனுக்கள் தாக்கல் 
செய்யப்பட்டன. நேற்று மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. இதில் 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 26 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டது.காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் எதுவும் நிராகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story