ஒகேனக்கல் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்


ஒகேனக்கல் அருகே  காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 21 March 2021 11:45 PM IST (Updated: 21 March 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் ஆலம்பாடி சாலையில் தாசில்தார் மனோகரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தியபோது ரூ.1 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக காரில் வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பொன்முடி என்பவரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணம் பறிமுதல் செய்து பென்னாகரம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
1 More update

Next Story