ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 March 2021 7:44 PM GMT (Updated: 2021-03-22T01:14:13+05:30)

வாகன சோதனையில் ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோட்டைப்பட்டினம்
மீமிசல் பகுதியை அடுத்த பரிவீரமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி லதா பேபி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியிலிருந்து மீமிசல் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இதனையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து மீமிசல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அந்த வாகனத்தின் டிரைவர் சங்கர் (வயது 39) என்பவரிடம் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாமுவேல் ஞானம், சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் ஆகியோர் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் இந்த புகையிலை பொருட்கள் மீமிசல் பகுதியை அடுத்துள்ள கோபாலபட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொண்டு செல்வதாக தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


Next Story