வெம்பக்கோட்டை அணையில் குறைந்து வரும் நீர்மட்டம்


வெம்பக்கோட்டை அணையில் குறைந்து வரும் நீர்மட்டம்
x
தினத்தந்தி 21 March 2021 8:42 PM GMT (Updated: 2021-03-22T02:12:34+05:30)

வெம்பக்கோட்டை அணையில் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை அணையில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. 
வெம்பக்கோட்டை அணை 
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில  மாதங்களாக மழை எதுவும் பெய்யவில்லை. ஆதலால் வெம்பக்கோட்டை அணைக்கு நீர்வரத்து இல்லை. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. 
கோடை மழை பெய்தால் மட்டுமே அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. சிவகாசி நகராட்சியை சேர்ந்த மக்களுக்கு வெம்பக்கோட்டை அணையில் இருந்து 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
பொதுமக்கள் கவலை 
அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால். தற்போது சிவகாசி நகராட்சிக்கு செல்லும் தண்ணீரின் அளவு 20,000 லிட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது. அணையில் தொடர்ந்து நீர் மட்டம் குறைந்து வருவதால் பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.

Next Story