இலவச மருத்துவ முகாம்


இலவச மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 21 March 2021 9:16 PM GMT (Updated: 2021-03-22T02:46:31+05:30)

ராஜபாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராஜபாளையம், 
ராஜபாளையம் துரைச்சாமிபுரம் தெரு சாலியர் சமூகம் மற்றும் சாலியர் வாலிபர் சங்கத்தின் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் ராஜபாளையத்தில் நடந்தது. ஐந்து ஊர் சாலியர் சமூக தலைவர் டாக்டர் ஆறுமுகப் பெருமாள் தலைமை வகித்தார். வைமா கல்வி நிறுவனங்களின் தலைவர் திருப்பதி செல்வன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு சாலியர் இளைஞர் அணி அமைப்பாளர் கணேசன் வரவேற்றார். துரைச்சாமிபுரம் ஊர் தலைவர் மாடசாமி முகாமினை தொடங்கி வைத்தார். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது. முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு டாக்டர்கள் பரிசோதனைகள் செய்ததுடன், ஆலோசனைகளும் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை சரவணன் சிவகுருநாதன், திருப்பதி செய்தனர். தோப்புப்பட்டி தெரு ஊர் தலைவர் சிவலிங்கம் நன்றி கூறினார்.


Next Story