ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1¼ கோடி பறிமுதல்


ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாததால்  ரூ.1¼ கோடி பறிமுதல்
x
தினத்தந்தி 21 March 2021 9:41 PM GMT (Updated: 21 March 2021 9:41 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1¼ கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1¼ கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 
ரூ.1¼ கோடி பறிமுதல்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை குழு, வீடியோ கண்காணிப்பு குழு, நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்பவர்களிடம் இருந்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுவரை ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.41½ லட்சம் ஒப்படைப்பு
அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ரூ.38 லட்சத்து 9 ஆயிரமும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் ரூ.7 லட்சத்து 74 ஆயிரமும், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.17 லட்சத்து 35 ஆயிரமும், பெருந்துறை தொகுதியில் ரூ.5 லட்சத்து 34 ஆயிரமும், பவானி தொகுதியில் ரூ.11 லட்சத்து 52 ஆயிரமும், அந்தியூர் தொகுதியில் ரூ.7 லட்சத்து 26 ஆயிரமும், கோபி தொகுதியில் ரூ.22 லட்சத்து 22 ஆயிரமும், பவானிசாகர் (தனி) தொகுதியில் ரூ.21 லட்சத்து 56 ஆயிரமும் என மொத்தம் ரூ.1 கோடியே 31 லட்சத்து 10 ஆயிரத்து 980 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணங்களை காண்பித்ததால் இதுவரை ரூ.41 லட்சத்து 66 ஆயிரத்து 840 உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ரூ.89 லட்சத்து 44 ஆயிரத்து 140 கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் பறக்கும் படை குழுவினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Next Story