சங்கரன்கோவிலில் பலத்த சூறைக்காற்றுடன் மழை


சங்கரன்கோவிலில் பலத்த சூறைக்காற்றுடன் மழை
x
தினத்தந்தி 21 March 2021 9:58 PM GMT (Updated: 2021-03-22T03:28:34+05:30)

சங்கரன்கோவிலில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

சங்கரன்கோவில், மார்ச்:
சங்கரன்கோவிலில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 6.45 மணி அளவில் திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பலத்த சூறைக்காற்றும் வீசியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதில் கோமதியாபுரம் புது 1-வது தெருவில் புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் ராமையா என்பவரது மொபட் மீது மரம் சாய்ந்து விழுந்தது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறும் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு நிலைய அதிகாரி விஜயன் தலைமையில் ஏட்டு கருப்பையா, வேல்சாமி உட்பட வீரர்கள் விரைந்து வந்து மரம் அறுக்கும் எந்திரம் மூலம் சாய்ந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி மொபட்டை மீட்டனர். மேலும் பலத்த மழையின் காரணமாக சங்கரன்கோவில் நகரில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

Next Story