தி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; நத்தத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலோடு முற்றுப் புள்ளி வையுங்கள் என்று நத்தத்தில் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
நத்தம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான நத்தம் விசுவநாதன் போட்டி யிடுகிறார். இவரை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு நத்தம் பஸ் நிலையம் அருகே திறந்தவெளி ஜீப்பில் நின்று பிரசாரம் மேற் கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சொல்வதெல்லாம் பொய். தற்போது செல்லும் இடமெல்லாம் மக்களிடம் மனு வாங்கி பெட்டியில் வைத்து பூட்டி அதற்கு 100 நாளில் தீர்வு காண்பதாக கூறுகிறார். இவர் தந்தை முதல்-அமைச்சர், இவர் துணை முதல்-அமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர் என பதவி வகித்தபோது மனு வாங்காமல் தற்போது மனு வாங்கி மக்களை ஏமாற்று கிறார். ஆனால் தமிழக அரசு 1100 உதவி எண்ணை அறிவித்து செல்போன் மூலம் மக்கள் சொல்லும் குறை களுக்கு அனைத்து துறை களின் வாயி லாக உடனடியாக தீர்வு காணப் படுகிறது. 2020-ம் ஆண்டு செப்டம்பரில் ஆரம்பிக் கப் பட்ட இத்திட்டத் தின் கீழ் தற்போது 95ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
வாரிசு அரசியல்
மறைந்த முதல்-அமைச்சர் கள் எம்.ஜி.ஆரால் நிறுவப் பட்டு, ஜெயலலிதாவால் பல இடர்பாடுகளை கடந்து வளர்ந்த இயக்கம் அ.திமு.க. அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் தான் வாரிசு. உங்களுக்காகத்தான் தங்களது உடல் நலனை கூட பாராமல் உழைத்தார்கள். ஆனால் தி.மு.க. குடும்ப கட்சி. மாநிலம் முதல் மாவட்டம் வரை வாரிசு அரசியல் தான் செய்கிறார்கள். திண்டுக்கல்லில், தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டிருந்த பிரசார மேடையில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் மூத்த நிர்வாகி முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமிக்கு மேடையின் ஓரத்தில் இருக்கை
அமைக்கப்பட்டி ருந்தது. நடை பெறும் சட்ட மன்ற தேர்தலோடு தி.முக.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
பா.ஜ.க.கூட்டணி
நாங்கள் பா.ஜ.க.வுடன் தேர்தல் கூட்டணி வைத்துள் ளோம். ஆனால் எங்களுக் கென்று தனி கொள்கை உள்ளது. தேர்தல் கூட்டணி என்பது வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக அமைப்பது. அவ்வளவு தான். இதே பா.ஜ.க.வுடன் தி.மு.க.கூட்டணி வைத்து மத்தியில் கேபினட் மந்திரிகளாக பதவி வகித்த னர். அப்போது பா.ஜ.க. நல்ல கட்சி. நாங்கள் கூட்டணி வைத்தால் தீய கட்சியா?. தி.மு.க. பச்சோந்தி கட்சி. ரவுடி கட்சி. அவர்களை நம்ப வேண்டாம். அ.தி.மு.க அரசு சிறு பான்மை மக்களுக்கு பாது காவலன். ஜெருசலேம், மெக்கா புனித பயணம், உலமாக்கள் ஊதிய உயர்வு, ரம்ஜான் நோன்புக்கு இலவச அரிசி, நாகூர் தர்காவுக்கு சந்தனம், சென்னையில் ஹஜ் இல்லம் என பல்வேறு சலுகைகள் வழங்கி சாதி, மத வேறுபாடின்றி தமிழகம் அமைதிபூங்காவாக திகழ் கிறது. நாங்கள் சட்டத்தின் ஆட்சியை நடத்துகிறோம்.
மின்மிகை மாநிலம்
தி.மு.க. ஆட்சியில் மின் வெட்டு அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் மின்சார துறை அமைச்சராக பொறுப் பேற்ற நத்தம் விசுவநாதன் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வின் ஆலோசனையின் பேரில் 3 ஆண்டு களில் அதனை சரிசெய்து தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றி சாதனை படைத்தார். மேலும் இந்த நத்தம் தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் அறிந்து பல்வேறு வளர்ச்சி பணிகளை செயதுள்ளார். நத்தம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி கட்டப்படுகிறது. அங்கு அப்பல்லோ மருத்துவ மனைக்கு சமமான சிகிச்சை அளிக்கப்படும், நத்தம் விசுவ நாதன்
நத்தம் ஒன்றியக்குழு தலைவர், 4 முறை சட்டமன்ற தேர்தலில் இங்கு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பி னர், அமைச்சர் பொறுப்பு வகித்தவர். மீண்டும் அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அ.திமு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள இலவச கியாஸ் சிலிண்டர், கேபிள் டி.வி. கட்டணம், 150 யூனிட் மின்சாரம், வாசிங் மெசின், முதியோர் உதவித் தொகை உயர்வு, பெண்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை உள்ளிட்ட அத்தனை அறிவிப்புகளும் செயல்படுத் தப்படும். கல்விகடன், கூட்டுறவு நகைகடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். நத்தம் தொகுதியை பொறுத்த வரை விவசாயம் சார்ந்த பகுதி. இங்கு குடி மராமத்து பணிகள் மூலம் மழைநீர் வீணாகாமல் குளங்களில் சேமிக்கப்பட்டுள் ளது. மேலும் வரும் அ.தி.மு.க ஆட்சியில் நத்தம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப் படும். நத்தத்தில் மின்மயானம், ஜவுளி பூங்கா, திண்டுக்கல் -நத்தம் சாலையில் சிறுமலை பிரிவிலிருந்து திருச்சி, மதுரை நான்கு வழிச்சாலைக்கு செல்ல ரிங்ரோடு அமைக்கப் படும். நொச்சியோடைப் பட்டி, கோணப்பட்டி நீர்த்தேக்கம், நத்தத்தில் மலைக் கிராமங் களுக்கு தார்சாலை என பல் வேறு திட்டங்கள் செயல்படுத்
தப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பிரசாரத்தின் போது அ.தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், நகர செயலாளர் சிவலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் மணி கண்டன், சின்னு, மாவட்ட மாணவரணி இணை செய லாளர் அசாருதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story