கும்மிடிப்பூண்டி அருகே, ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கவரப்பேட்டை போலீ்ஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சிவராஜ் (வயது 40).
இவர் கவரப்பேட்டையை சேர்ந்த பில்டிங் காண்டிராக்டர் ஜெகதீசன் (வயது 35) என்பவரிடம் சில வழக்குகள் சம்பந்தமாக அவர் மீது பிரச்சினை இல்லாமல் முடித்து கொடுக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து ஜெகதீசன் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கலைச்செல்வனிடம் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜை ஆரணி பஜார் வீதிக்கு வரச்சொல்லி ரூ.20 ஆயிரத்தை கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவரை ஆரணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.
Related Tags :
Next Story