காஞ்சீபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல்
காஞ்சீபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சீபுரம்,
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியில் பறக்கும் படை அலுவலர் கலைச்செல்வி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.3½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.70 ஆயிரத்தை பறக்கும் படை அலுவலர் கோமதி பறிமுதல் செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 லட்சத்து 20 ஆயிரம், வருவாய் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமியிடம் ஓப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story