தொகுதிக்கு தேவையான ஏராளமான புதிய திட்டங்கள் திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. உறுதி


தொகுதிக்கு தேவையான ஏராளமான புதிய திட்டங்கள் திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. உறுதி
x
தினத்தந்தி 28 March 2021 6:19 PM IST (Updated: 29 March 2021 4:49 PM IST)
t-max-icont-min-icon

தேர்தலில் வெற்றி பெற்ற உடன் தொகுதிக்கு தேவையான ஏராளமான புதிய திட்டங்களை பெற்றுத் தருவேன் என்று திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

திருப்பூர், 

திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. கோல்டன்நகர் பகுதி 22-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வ.உ.சி.நகர் கவுமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் பிரசாரத்தை தொடங்கிய அவர் கொடிக்கம்பம், ஜெய்நகர், கட்டபொம்மன்–நகர் உள்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த பகுதிகளில் வீதி வீதியாக திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

பொதுமக்களின் கோரிக்கையான குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் வெகு விரைவில் 4-வது குடிநீர் திட்ட பணிகள் நிறைவடைந்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. பாப்பநாயக்கன்பாளையம் நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் தொகுதிக்கு தேவையான ஏராளமான புதிய திட்டங்களை பெற்றுத்தருவேன். எனவே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story