பிரசாரத்தின் போது தொண்டர்கள், பொதுமக்கள் முன்னிலையில் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய துறையூர் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி


பிரசாரத்தின் போது தொண்டர்கள், பொதுமக்கள் முன்னிலையில் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய துறையூர் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி
x
தினத்தந்தி 28 March 2021 10:02 PM IST (Updated: 28 March 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி தங்கமணி வாக்கு சேகரித்து, தனது திருமண நாளை பொதுமக்கள், தொண்டர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார்.

துறையூர், 

திருச்சி மாவட்டம் துறையூர் நகர பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி தங்கமணி வாக்கு சேகரித்து, தனது திருமண நாளை பொதுமக்கள், தொண்டர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார். இதைதொடர்ந்து துறையூரை அடுத்த பச்சை மலையில் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி தங்கமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் அவர் பேசுகையில், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பெருகவும், மக்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் கடந்த முறை நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது உங்களுக்கு தேவையான தார் சாலை வசதிகள், பஸ் வசதிகள், குடிதண்ணீருக்காக, விவசாயத்திற்காக கிணறு அமைத்துக்கொடுத்தல் உள்ளிட்ட பல பணிகள் செய்து கொடுத்துள்ளேன்.

இதுபோல் மீண்டும் உங்களுக்காக உங்கள் நலன் கருதி பாடுபட மீண்டும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும். ஒவ்வொரு வீட்டின் குடும்பத்தலைவிக்கு மாதா மாதம் ரூ.1,500 கிடைத்திடவும், அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் கிடைத்திடவும் உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார். பிரசாரத்தின் போது ஒன்றிய செயலாளர்கள் சேனை செல்வம், வெங்கடேசன், உப்பிலியாபுரம் ஒன்றிய செயலாளர் அழகாபுரி  செல்வராஜ், மாவட்ட விவசாய அணி பொன் காமராஜ், வயநாடு ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன், வழக்கறிஞர் ராமசாமி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் செந்தில்குமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய பொருளாளர் கலைவாணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Next Story